என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நினைவு நாள்"
சென்னை:
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
அவரது 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தினத்தந்தி, தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். #DrSivanthiAditanarMemorial
கவிதையிலே இருந்த நாட்டம், பள்ளிப் படிப்பிலே இல்லை. எப்போதும் எதுகையும் மோனையுமாகவே அவர் வலம் வந்து கொண்டிருந்தார். பழமை வயலிலே புரட்சி நீர்பாய்ச்சி புதுமைகளை அறுவடை செய்தவர். வாழுகிற காலமும், வளர்கின்ற சூழ்நிலையுமே ஒரு மனிதனை கவிஞனாக உருமாற்றம் செய்கிறது என்பதற்கு உதாரண புருஷன் பாரதிதான்.
‘பாரதி, நீ நினைத்தவுடனே பாட்டெழுதும் வரகவியாமே! காளமேகமாமே! எங்கே ஒரு கவிதை சொல்லு’ என்று ஆசிரியர் கேட்க, “மேகம், விரும்பி தானாகப் பொழியுமே தவிர அது மற்றவர்களின் உத்தரவுக்கெல்லாம் பொழியாது” என்று பாரதி பதிலுரைத்தார். ஆசிரியரோ வாயடைத்துப்போனார்.
பாரதி மேல் இருந்த பொறாமையால் காந்திமதி நாதன் என்பவர், ‘பாரதி சின்னப்பயல் என்ற ஈற்றடியை’ கொடுத்து பாடச்சொன்னார். பாரதி அதன் உள்நோக்கத்தை புரிந்துகொண்டார். உடனே, ‘காரிருள் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்’ என்று பாடி எல்லோரையும் வியக்கவைத்தார்.
ஆனாலும், அந்தப் பாராட்டில் பாரதி மகிழ்வுறவில்லை. மாறாக காந்திமதி நாதனைப் புண்படச் செய்துவிட்டோமோ என்று வருத்தம் கொண்டார். பிறகு, ‘காந்திமதி நாதற்கு பாரதி சின்னப்பயல்’ என்று மாற்றிப்பாடி, இப்போதும் எல்லோரின் பாராட்டைப் பெற்றார் பாரதி. இத்தகைய மாண்புக்கும் மாட்சிக்கும் உடையவராய் பாரதி திகழ்ந்தார்.
பாரதியின் தமிழ்ப்புலமைக்குப் பக்கத்தில் நிற்பதற்கே யாருக்கும் தைரியமில்லை என்ற நிலை உருவானது. எட்டயபுரத்து அரசவைப் புலவர்களுக்கு மத்தியில் பெற்ற ‘பாரதி’ எனும் பட்டம் அவருக்கு கம்பீரத்தையும் கவுரவத்தையும் கொடுத்தது.
ஒரு கவிதையை நாம் படிக்கும்போது இத்தகைய கவிதையை இதுவரை எவரும் எழுதவில்லை என்ற எண்ணம் வரவேண்டும். அதுதான் கவிஞனின் வெற்றி. கடலைக் கலக்கி, மலையைத் தகர்த்து சீறிப்பாய்ந்துவரும் சண்டமாருதப்புயலாக பாரதியின் ஒவ்வொரு கவிதையும் புறப்பட்டன. சொற் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது என புதிது புதிதாய் அவை வலம் வந்தன.
அக்கினிக் குஞ்சு என்பது அளவிலே சிறியது. அது ஒரே ஒரு தீப்பொறிதான். அதன் மகத்தான சக்தி ஆங்கிலேயர்களின் ஆதிக்க காட்டை எரித்து சாம்பலாக்கும் வல்லமை உடையது என்பதை குறியீடாக வைத்துத்தான்,
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்ற கவிதையைக் கொளுத்திப் போட்டார் பாரதி. எனது கவிதை ஒரு தீப்பொறிதான். அது பற்றிக் கொண்டால் உனது ராஜ்யம், பூஜ்யம் ஆகிவிடும் என்று ஆங்கிலேயர்களுக்கு விடுத்த எச்சரிக்கை உள்ளே தீபந்தமாக இருந்தது என்பதே உண்மை.
ஏனோ தானோ என்று எந்த ஒரு சொல்லையும் பாரதி பயன்படுத்தியதே இல்லை. கேட்டாலே கிறுகிறுத்துப் போகும் அளவுக்கு பாட்டாலே சொல்லி அடித்தவர் அவர். ‘தேடு, கல்வியிலாத ஊரை தீக்கிரையாக்கு’, ‘மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’, ‘இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்தான், அண்ணன் கையை எரித்திடுவோம்’, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என பாரதியின் ஒவ்வொரு கவிதையிலும் அனல் பறந்தது.
வீட்டிலே கடுமையான அரிசிப் பஞ்சம். அன்றைய உணவுக்காக தனது மனைவி செல்லம்மா வாங்கி வைத்திருந்த அரிசியை அள்ளி வீசி காக்கை, குருவிகள் அவற்றைக் கொத்தித்தின்னும் அழகைப் பார்த்து குதூகலித்தவர் பாரதி. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடியவராயிற்றே அப்படித்தானே இருப்பார். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாத மனித ஜாதி பாரதி.
நாட்டுக்கும், இனக்கேட்டுக்கும், பெண்ணடிமை வீட்டுக்கும், விடுதலை வேண்டி பாரதியின் கவிதை வாள் சுழன்றது. அன்றாடச் சோற்றுக்காக பிறரை அண்டிப் பிழைக்கிறவனாக, பின்னர் மாண்டுபோகிற சாதாரண மனிதனாக என்னை நினைத்துவிட்டாயோ என்று பராசக்திக்கே கேள்விகளை தொடுத்தவர் பாரதி.
‘தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று
இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்’ என்ற பாரதியின் வரிகள் இன்றைய அரசியல்வாதிகள் நினைவுகொள்ள வேண்டிய வைர வரிகள். பயம் என்ற வார்த்தை பாரதியின் அகராதியிலே இல்லை. திருவனந்தபுரம் மிருக காட்சி சாலையில் சிங்கத்தின் அருகிலே சென்று ‘விலங்கரசனே கவியரசன் வந்திருக்கேன்’ என்று உறவாடிய போதும் சரி, மதம் பிடித்த யானை என்று தெரிந்தும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையிடம் அச்சமின்றி சென்ற போதும் சரி, பாரதியிடம் எள்ளளவும் பயம் இருந்ததில்லை.
தமிழ்மொழி மீது பாரதிக்கு இருந்த பற்றும், பாசமும், காதலும், வெறும் சொல்லில் அடங்காது. பன்மொழி அறிஞராய்த் திகழ்ந்த பாரதியின் ஞானச்செறுக்கிற்கு தலை வணங்குவோம். இன்னும் பல்லாண்டு அவன் வாழ்திருந்தால் மண்ணைத் தொட்ட பாரதியின் படைப்புகள் உயரத்தால் விண்ணைத் தொட்டிருக்கும். தமிழ் அன்னையின் மணிமகுடத்துக்கு இன்னும் ஆயிரம் பல்லாயிரம் வைரங்கள் கிடைத்திருக்கும்.
முன்னூறு வருடங்களில் எழுதி முடிக்க வேண்டிய கவிதைகளை முப்பத்தி ஒன்பது வயதுக்குள்ளே எழுதி முடித்த இமாலயக் கவிஞன் பாரதி, 11-9-1921 அன்று மரணத்தை தழுவினார்.
பாரதி உயிரோடிருந்தபோது நாம் கொண்டாடவில்லை. அவர் பசி போக்க எவரும் முன்வரவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் பங்கு கொள்ளவில்லை. தன்னாலே கையூன்றி எவரின் தயவின்றி, முன்னாலே வந்த அந்த மகாகவியின் மரணத்தின்போது, பின்னாலே நடந்து போனவர்கள் எண்ணிக்கையை எண்ணினால் கண்களில் கண்ணீர் கசிகிறது.
‘பாரதி’, சின்னச்சாமி பெற்றெடுத்த ‘பெரியசாமி’. அந்த எட்டயபுரத்து எரிமலையை என்றும் நம் நினைவில் வைத்து போற்றுவோம். ஓங்குக பாரதியின் புகழ்!
இன்று (செப்டம்பர் 11-ந்தேதி) பாரதியின் நினைவு தினம்.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் செந்துறை சாலை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அப்துல்கலாம் பொன்மொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் செய்திருந்தார்.
இதேபோல் அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி மற்றும் மக்களாட்சி பேரவை சார்பில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அரியலூர் ஒன்றியம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் உருவப்படம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணி புரிகின்ற ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சார்பில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் அரசு சார்ந்த அலுவலகங்களிலும் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம்.
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயன், மகிழன்பன், இ.சி.சேகர், நாகராஜ், பெரம்பூர் மகேஷ், வேளாங்கண்ணி.
தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், சூளை குப்புசாமி.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், சக்தி சிவகுமார், வீரபாண்டியன், தாமோதரன், ரவிராஜ், முத்தமிழ், சீதாராமன், சேகர், அன்பழகன், பன்னீர், கோல்டன் ரவி, தணிகை வேல், ஜெகதீஷ், ராமலிங்கம், அன்பழகன், எம்.எஸ்.திரவியம், ராமசாமி, சித்ரா.கிருஷ்ணன், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வேலுத்தேவர், சக்திவேல், ஜவகர், முகமது பாரூக், தமிழ்ச்செல்வன், சூளை ராஜேந்திரன், வக்கீல் நரேஷ்குமார்.
பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், ஜெய்சங்கர், தனஞ்செயன், ஏழுமலை, சாய் வெங்கடேசன், முரளி.
ம.தி.மு.க. நிர்வாகிகள் கணேசமூர்த்தி, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சுப்பிரமணி, நன்மாறன், மைக்கேல்ராஜ், பூமிநாதன்.
விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்லத்துரை, ரவிசங்கர், ராஜேந்திரன், எழில் இமயன், சேத்துப்பட்டு இளங்கோ, ஜேக்கப்.
த.மா.கா. நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோ கரன், ரவிச்சந்திரன், டி.சிவ பால், நாஞ்சில் நேசையா.
தே.மு.தி.க. நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லதம்பி, விசாகராஜன், பூங்கா ரமேஷ், பிரபு, பாஸ்கர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசு, வாகைவேந்தன், பார்த்த சாரதி, ராஜா, சாலமன், சரவணன், விக்னேஷ், விமல்ராஜ்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தானம், சிவகுமார், வைகுண்டராஜா, வி.பி.அய்யர், விக்டர், ராபர்ட், மாங்காடு முருகேச பாண்டி, பொன்ராஜ், கருணைதாசன்.
புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஆர்.டி.சேது ராமன், ராஜாராம், எஸ்.பழனி, செல்வம், சுதர்சன், மனோகரமூர்த்தி.
தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யா மொழி, மாநில செயலாளர் கருணாகரன்.
தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், நிர்வாகிகள் அப்துல்சபிக், ஸ்ரீதர், தர்மேஷ், விஜய் ஆனந்த், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், தீபா பேரவை மாதவன்.
அகில இந்திய காந்தி - காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணிஅரசன், ஐகோர்ட்டு வக்கீல் இரா.சிவசங்கர்.
சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் பி.தங்கமுத்து, அனியாப்பூர் ராஜகோபால், தமிழ்நாடு நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் மணிமாறன், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன், தமிழ்நாடு பனை வளர்ச்சி கழக முன்னாள் இயக்குனர் பார்வதிமுத்து, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார், எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, இட்லி இனியவன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலா ளர் கார்த்திகேயன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார், அகில இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை கண்ணன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க மத்திய செனனை மாவட்ட தலைவர் வில்லிவாக்கம் பிரபாகரன்.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் ராஜசேகரன் நாடார், சி.திருப்புகழ் நாடார், எஸ். சிங்கராய நாடார், சாமுவேல், தேவராஜ் சீலன், செந் தில்குமார், சரவணபவன், ஹரிதாஸ், சேம் நாடார், நாகராஜ் நாடார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.
அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற் சங்க பேரவை தலைவர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு, கார்த்திகேயன், குகன்கோபிநாத், பாலமுருகன், முத்துக்குமார், நந்தகுமார், மவுலிவாக்கம் சுற்றுவட்டார நாடார் சங்க தலைவர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் பாஸ்கர், துணை பொதுச்செயலாளர் பொன்ராஜ்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணி ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், துணை செயலாளர் வன்னியரசு, இணை செயலாளர் நாகராஜன், அனியாப்பூர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல் நாடார், பொருளாளர் மனோகரன், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் தங்கபெருமாள், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மகளிரணி தலைவி சுந்தரமீனாட்சி, தேரடி ராஜன், சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சாலமோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் செல்வராஜ், காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆலோசகர் வைரவராஜன்.
ஆலந்தூர் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஆலந்தூர் கணேசன் நாடார், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், பொதுச்செயலாளர் பால் ராஜன், பொருளாளர் நம்புசாமி, ஆலோசகர் முத்து, வீரமாமுனிவர் தமிழ் சங்க தலைவர் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம், செயலாளர் அப்துல்ஹாரி, பொருளாளர் சுந்தரசேகர், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகவேல், ஞானசேகர், முல்லைராஜா, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் முத்துக் குமார், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க செயலாளர் ஆர்.செல்வகுமார், பொருளாளர் சி.லட்சுமணன், தங்கமுத்து நாடார், சின்னமணி நாடார், கொட்டிவாக்கம் முருகன், வன்னிய ராஜன்.
அயனாவரம் ரஜினிராஜ், சுரேஷ்குமார், பிரபாகரன், செல்வம், கணபதி, ஜெய், தமிழன்னை செய்தி ஆசிரியர் ரவி, பார்க்கவ குல சங்க நிர்வாகி தனபால் உடையார், சந்தானம், தங்கவேல் உடையார், செல்வ கண்ணன், மகாலட்சுமி, சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் நாகராஜன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சந்திரபாபு, சந்திரன், மோகன், பாஸ்கர், கந்தவேல், ராஜேந்திரன், அந்தோணி, உஷாராணி, ஹரி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற திருவொற்றியூர் நகரத் தலைவர் முல்லைராஜா, நிர்வாக குழு உறுப்பினர் ஜாம்ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க துணை பொதுச் செயலாளர் பாஸ்கர் ராஜா, மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகர், அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக தலைவர் காட்ஸ்பிரே நோபிள், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, நற்பணி மன்ற மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.
பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், முருகேசன், பால்ராஜ், அய்யங்கண்ணு. #spadithanar
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் ஆவார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்
காங்கிரசின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான, மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், தொண்டர்களும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். #rajivgandhi #deathanniversary #leaderspayhomage
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்